மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மாதத்தில் கூடுதலாக தவணையாக 3% உயர்த்தப்பட்டது. மொத்த அகவிலைப்படி 31% ஆக இருக்கும் நிலையில் அடுத்த தவணையாக கூடுதலாக 3% அதிகரிக்க உள்ளது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டின் தொடக்கம் முதல் கடந்த தவணை வரைக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 3 தவணைகளுக்கான DA குறித்து தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள DA குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் இறுதியாக 17% DA பெற்று வந்த ஊழியர்களுக்கு கூடுதலாக 11% DA வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது அமலுக்கு வந்தது.

அதன்பின்னர், ஜூலை 1,2021 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக நவம்பர் மாதத்தில் இந்த தவணைக்கான DA உயர்வு வந்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படி உயர்வினை பெற்றுள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 2022 இல், அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்க இருக்கிறது. 2022 ஜனவரியில் எவ்வளவு அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆனால், ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, டிஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வு வழங்க இருக்கிறது. இது தவிர, 2022 பட்ஜெட்டுக்கு முன் உடல் தகுதி காரணி குறித்தும் இறுதி முடிவெடுக்கப்படும். AICPI இன் தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அறிக்கையில், முடிவின் படி, செப்டம்பர் 2021க்குள், அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றிற்கும் மேலும் 1 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மொத்த டிஏ 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com

Post a Comment

0 Comments