PLUS TWO தேர்வுகள் இரத்து வரவேற்கத்தக்கது- டாக்டர் இராமதாஸ் ..!!

PLUS TWO தேர்வுகள் இரத்து  வரவேற்கத்தக்கது- டாக்டர் இராமதாஸ் ..!!


தமிழகத்தில் PLUS TWO பொதுத்தேர்வுகளை தமிழக அரசு இரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில்(+2)மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து விரைவில் அறிக்கையளிக்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சார்பாக குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். PLUS TWO  தேர்வுகள் இரத்து செய்யப்பட்டாலும், மாநில கல்வித்திட்டத்தின் மூலமாகவே உயர்கல்விக்கு சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் சார்ந்த விஷயங்களை கருத்தில் கொண்டு PLUS TWO தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது. 

மேலும், NEET உள்ளிட்ட தேர்வுகளை இரத்து செய்ய கூறியும் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர் இராமதாஸின் ட்விட்டர் பக்கத்தில், " தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments