JUNE 15- முதல் ரூ.2,000 வழங்கப்படும்:தமிழக அரசு..!!

 JUNE 15- முதல் ரூ.2,000 வழங்கப்படும்:தமிழக அரசு..!!

Corona தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காக்கும் வகையில் வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோகத் திட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாணத் தொகை வழங்க ஆணையிட்டு அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, Corona நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் நிவாரண நிதி 2 ஆம் தவணைக்கான டோக்கன் வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments