CBSE PLUS TWO பொதுத்தேர்வு தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை..!!

CBSE PLUS TWO பொதுத்தேர்வு தொடர்பாக, பிரதமர் மோடி  ஆலோசனை..!!

CBSE PLUS TWO பொதுத்தேர்வு தொடர்பாக, துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய அரசு அறிவிப்பு:

CORONA காரணமாக CBSE -10th STD தேர்வுகளை ரத்து எனவும் CBSE- Plus Two வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

தேர்வு ரத்து செய்ய வேண்டும்:

CORONA பரவல் காரணமாக CBSC- PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியானது. இதற்கிடையில், SUPREME COURTல் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், CBSE PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி - ஆலோசனை:

இந்நிலையில், CBSE- PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, பிரதமர் மோடி  இன்று மாலை மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு CBSE PLUS TWO வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments