குழந்தை திருமணம் செய்தால் -2 ஆண்டு சிறை..!!

குழந்தை திருமணம் செய்தால் -2 ஆண்டு சிறை..!!

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள், அதற்கு ஆதரவாக செயல்படுவர்கள் , யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 குழந்தைகள் திருமணம் நடத்தி வைப்பவர்கள், அதை ஊக்குவிப்பவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
நாட்டில் பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும், திருமணத்துக்கான சட்டபூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு நடக்கும் திருமணம், சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும். இத்தகைய திருமணம் நடத்துபவர்களுக்கு, சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் , நடத்த ஊக்குவிப்பவர்களுக்கும் 2ஆண்டுகள் வரை, கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான தகவல்களை, பொதுமக்கள் அரசுக்கு தெரிவிக்க வசதியாக, 1098 என்ற இலவச போன் எண் உள்ளது. மாவட்ட சமூக நல அலுவலரை, 90252 93938 என்ற எண்ணிலும், மகளிர் உதவி மையத்தை, 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments