கர்நாடகத்தில் ஊரடங்கைமேலும் நீட்டிக்க திட்டமா..??

 கர்நாடகத்தில் ஊரடங்கைமேலும் நீட்டிக்க திட்டமா..??

கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க திட்டமா? என்பது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

உணவு பொட்டலங்கள்:

👌பெங்களூருவில் முன்கள பணியாளர்கள், ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும் பணியின் தொடக்க நிகழ்ச்சி பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே நடைபெற்றது. 

👌இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, உணவு பொட்டலங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். 

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

👌கர்நாடகத்தில் ஊரடங்கு நேரத்தில் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் இஸ்கான் கோவில் நிர்வாகம், உணவு பொட்டலங்களை தயாரித்து வழங்குகிறது.

👌கடந்த முறையும் இத்தகைய உணவுகளை அந்த நிர்வாகம் வழங்கியது. அந்த கோவில் நிர்வாகம் அரசுடன் கைகோர்த்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட உணவு தேவை உள்ளோருக்கு மதிய உணவு வினியோகம் செய்யப்படுகிறது.

பரிசோதனைகளின் எண்ணிக்கை:

👌தினமும் 1,000 போலீசாருக்கு இதன் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா, நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

👌அப்போது கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முதல்-மந்திரி முடிவு எடுப்பார்.

👌கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. இதற்கு முன்பு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் கொரோனா பரிசோதனைக்கான சளி, மாதிரி சேகரிக்கப்பட்டது.

👌இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு பரிசோதனை மேற்கொள்வதை நிறுத்தியுள்ளோம். அதனால் பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Post a Comment

0 Comments