அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிப்பு

 

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. தலைமை முதலமைச்சர் முதல் மூன்று போட்டியாளருக்கு பரிகள் வழங்கினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டி கருப்பண்ணனுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

8 காளைகளை அடக்கிய சக்திக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை மேடையில் இருந்து கண்டுகளித்தனர்.

இறுதி நேரத்தில் களமிறங்கிய வெள்ளைக் காளை நெடுநேரமாக வாடிவாசலை விட்டு வெளியே வர மறுத்து அடம்பிடித்தது. அதன் கொம்புமீது நான்கைந்து கயிறுகளைச் சுற்றி வெளியே இழுத்துக் கொண்டுவந்த பின்னும் அதன் அருகில் யாரும் நெருங்க முடியவில்லை.

காலை 8 மணிக்குத் தொடங்கிய போட்டி திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 12 காளைகளை அடக்கிய விராட்டிப்பத்து கண்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அறிவிக்கப்பட்ட கிவிட் கார் முதல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டி கருப்பண்ணனுக்கு இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

8 காளைகளை அடக்கிய சக்திக்கு மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்கக் காசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசு குருவித்துறை சந்தோசுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவருக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த கார் வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments