பைனான்சியல் ஆப் என்ற பெயரில், குறுகிய கால கடன் வழங்கும் செயலிகள் குறித்து, மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், செயலி மூலமாக சில நிறுவனங்கள், அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக, தகவல் வந்திருப்பதாகவும், ஆர்பிஐ கூறியுள்ளது.
கடனை வசூலிக்க, பைனான்சியல் செயலிகள் மோசமாக நடந்து கொள்வதும், கடன்பெற்றவர்களின் மொபைல் போனில் உள்ள தகவல்களை திருடி, தரம்தாழ்ந்து செயல்படுவது குறித்தும், புகார்கள், தகவல்கள் வரப்பெற்றிருப்பதாகவும், ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் செயலிகள் குறித்து, அவற்றின் மோசமான நடைமுறைகள் குறித்து, காவல்துறையிலோ, அல்லது சைபர் கிரைம் பிரிவிலோ, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், ஆர்பிஐ வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
மேலும், https://sachet.rbi.org.in என்ற, தங்களது இணையத்தளம் வாயிலாக, ஆன்லைன் மூலமாகவும், புகார் அளிக்கலாம் என்றும், ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எவை, எவை என்பது தொடர்பான தகவல்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
please do not enter any spam link in the comment box.