என்னால தான் ஷிவானிக்கு கெட்ட பேரு .. ஒரே கில்ட்டியா இருக்கு.. கேவிக் கேவி அழுத பாலா!

Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியவுடன் முதல் ஆளாக வீட்டுக்குள் ஷிவானியின் அம்மா வந்த உடனேயே ஷிவானியை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்.

கடந்த 85 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தங்களை வெற்றியாளர்களாக நிரூபித்துக் கொள்ள ஒவ்வொரு வகையிலும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஷிவானி மட்டும் இதுவரை எந்த ஒரு தீவிர முயற்சியிலும் ஈடுபடாமல், எதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளேம் என்பதையும் மறந்து பாலாஜிக்கு மசாஜ் செய்வது, சாப்பாடு ஊட்டி விடுவது, அவ்வப்போது ரொமான்ஸ் செய்வது என தொடர்ந்து பொழுதை கழித்து வருகிறார்.

இது ஒரு சில சமயங்களில் பார்க்க க்யூட்டாக இருந்தாலும் இதையே முழு நேர வேலையாக பலநாள் செய்துகொண்டிருக்கும் ஷிவானியை பார்க்கும் பார்வையாளர்கள் வாய்ப்பு கிடைத்தால் ஷிவானியை வெளியில் அனுப்ப தயாராக இருக்கும் நிலையில் இதுவரை ஓரிரு முறை மட்டுமே நாமினேஷனில் வந்துள்ள ஷிவானியை இத்தனை நாட்கள் வரை பெரும்பான்மையான போட்டியாளர்கள் நாமினேட் செய்தது இல்லை. இந்த நிலையில் இப்பொழுது நாட்கள் குறையக் குறைய போட்டியாளர்களும் ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருக்க கடைசியில் வேறு வழியில்லாமல் இந்த வார எவிக்சன் லிஸ்டில் ஷிவானியும் இருக்க இந்த வாரம் வெளியில் செல்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது.

அதே போல சக போட்டியாளர்களும் ஷிவானியை நாமினேட் செய்யும்பொழுது இதுவரை 85 நாட்களில் ஷிவானி தன்னை நிரூபித்துக் கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, எந்த ஒரு டாஸ்கிலும் அவர் முழு ஈடுபாட்டுடன் விளையாடவில்லை என நாமினேட் ரீசன்களை அடுக்கடுக்காக அனைவரும் வைத்து வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது கூட பாலாஜி ஷிவானியை நாமினேட் செய்யவில்லை என்பது பச்சையாகவே அவருடைய ஃபேவரிசத்தை காட்டுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், வழக்கம்போல ஃப்ரீஸ் டாஸ்க்கும் தொடங்கிவிட்டது.

அதனடிப்படையில் முதல் ஆளாக ஷிவானியின் தாயார் உள்ளே வந்தவுடனேயே ஷிவானியை லெஃப்ட் ரைட் வாங்காத குறையாக.. நீ எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த, நீ இங்க செய்யுறதெல்லாம் வெளியில யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கியா” என கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டு செல்கிறார்.

இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கேவிக் கேவி அழுது கொண்டிருந்த ஷிவானியை பார்த்துவிட்டு என்ன நடந்தது என ரம்யாவிடம் பாலா கேட்க..சோலா வா நீ உன்னுடைய கருத்து எடுத்து வைக்கல, கம்ஃபோர்ட்ஜூண்ல இருக்கணும்னா வீட்டிலயே இருக்க வேண்டியதுதானே.

எனவும் பாலாவை பற்றி எதுவுமே கேட்கவில்லை எனவும் ரம்யா கூற, விஷயம் தெரிந்த பாலா.. ஷிவானியின் அம்மா கேட்ட கேள்விகளை கேள்விப்பட்டு தன்னால்தான் ஷிவானினுக்கு இந்த கெட்ட பெயர் அதற்கு நானும் தான் உடந்தையாக இருந்திருக்கிறேன்.

நானும் ஷிவானியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என தெரிகின்ற போது ஒரே கில்ட்டியா இருக்கு என கேவிக் கேவி பாலா அழுவதைப் பார்த்த பலரும் பயில்வான் பாலா இதுக்கெல்லாம் அழலாமா என கலாய்த்து வருகின்றனர் 🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com

Post a Comment

0 Comments