Rajini Kanth உடல்நிலை தேறியதையடுத்து ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 4.40 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், திடீரென உடல்நிலை பாதித்து சிகிச்சைக்கு 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி காரில் புறப்பட்டார். மருத்துவமனை வெளியே காத்திருந்த செய்தியாளர்களை நோக்கி காருக்குள் இருந்தபடி கையை அசைத்தபடி ரஜினி சென்றார்.
மருத்துவமனை தரப்பில், ஒரு வார காலத்துக்கு முழு ஒய்வெடுக்க ரஜினிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
please do not enter any spam link in the comment box.