உச்சத்தில் உயிரிழப்பு..அச்சத்தில் அமெரிக்கா

உச்சத்தில் உயிரிழப்பு..அச்சத்தில் அமெரிக்கா...

அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள கொரோன தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 25,000 பேருக்கு பரவியது. இதன் காரணமாக அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 37,000 ஐ கடந்துள்ளது.

இவர்களில் 16,000 க்கு அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 2,300 க்கு  அதிகமானோர் நோய் தொற்றுக்கு மரணித்து உள்ளதால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 72,000 ஐ கடந்துள்ளது.

இதனிடையே சீனாவில் குளத்தின் வேகம் குறைந்துள்ளதால் ஷாங்காய் நகரிலுள்ள டிஸ்னி பொழுதுபோக்கு மையம் வரும் 11 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த இறப்பு விகிதம் தற்போது இரண்டாவது நாளாக உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 330 பேர் பலியானதால் உயிரிழப்பு 25,500 ஐ  கடந்துள்ளது.

துருக்கியில் தலையணை உரைகளை அடைத்து சட்டவிரோதமாக கடத்த முயன்ற 80,000 முக கவசங்கள் சிக்கின.

ஐரோப்பியா நாடுகளிலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்ட இத்தாலியை கடந்து தற்போது இங்கிலாந்தில் அதிகம் பேர் மரணித்து உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி இத்தாலியில் 29,315 பேரும் இங்கிலாந்தில் 29,427 பேரும் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்று காரணமாக இங்கிலாந்தில் கார் விற்பனை 97 விழுக்காடு குறைந்துள்ளது.

Post a Comment

0 Comments