கொரோனா தொற்றை மறைத்தால் 3ஆண்டு சிறை


கொரோனா தொற்றை மறைத்தால் 3ஆண்டு சிறை

கொரோன தொற்று ஏற்பட்டதையடுத்து மறைத்தால்  சம்பந்தப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் மூன்று வருடம் வரை சிறை தண்டனையும் விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் பல தொற்று ஏற்பட்டதையடுத்து மறைத்து பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இதையடுத்து இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அதேபோன்று நோய் தடுப்பு காவலில் இருந்து தப்பி செல்பவர்கள் 1 வருடம் முதல் 3 வருடங்கள் வரை சிறையோ அல்லது 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments